Wednesday, July 25, 2012

TNPSC VAO EXAM - இலக்கண அறிமுகம்..

வணக்கம் நண்பர்களே.. தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்தும் TNPSC போட்டித் தேர்வுகள் வென்று அரசுப் பணியைப் பெறுவதே தற்போது அனைவருடைய இலக்காக இருக்கும். இதில் Group -II மற்றும் Group-IV ஆகிய தேர்வுகளுக்கு போட்டியாளர்களின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் போட்டித்தேர்வுகள் முந்தைய தேர்வுகளைவிட சற்றுக் கடினமாக கேட்கப்படுகிறது.

இந்த கடிமான என்ற வார்த்தையெல்லாம் அரைகுறையாகக் கற்றுத் தேர்ந்து அவசர அவசரமாக சென்றுதேர்வு எழுதிவிட்டும் வருபவர்கள் சொல்லும் வார்த்தைகள் என்று நான் சொல்வேன். எதையும் முழுமையாக கற்றுக்கொண்டால், எப்படி கேள்விக்கேட்டாலும் சரியாக பதிலெழுதி அதிக மதிப்பெண்கள் பெற்று வேலையையும் பெற்றுவிடலாம்..


குறிப்பாக தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வுகளில் வெற்றிப்பெறலாம். இன்றைய சூழ்நிலையில் தமிழ்மொழியை நன்கு கற்றுக்கொண்டாலே போதும். அவர் தேர்வில் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

தமிழர்களான நாம் தமிழ்மொழியைக் கற்றுத் தேறியிருக்க வேண்டும். தமிழ்நாட்டு அரசில் பணிபுரிபவர்கள் தமிழை நன்கு பகுத்தாய்ந்து கற்றவராக இருக்க வேண்டும் என்பது அரசின் எதிர்பார்ப்பு. அரசின் நோக்கம் தமிழை வளர்த்தெடுப்பதே. அரசு ஊழியர் அல்லது அரசுப் பணியாளர் அல்லது அரசு அதிகாரிகள் தமிழை நன்றாக கற்றவராக இருக்க வேண்டும் என்பதே அரசின் குறிக்கோள்.

அதனால் அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழையும் ஒரு பகுதியாகச் சேர்த்து தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து மொத்த மதிப்பெண்ணில் சரிபாதி தமிழுக்கு ஒதுக்கி கேள்வித்தாளை தயார் செய்கின்றனர்.

நீங்கள் ஆங்கில வழியோ அல்லது தமிழ்வழிக் கல்வியோ கற்றிருந்தாலும், அதில் தமிழும் ஒரு முக்கியப் பாடமாக இருந்திருக்கும். பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ்ப்பாடத்தை கட்டாயம் கற்று இருப்பீர்கள்.. ஆனால் இலக்கணத்தை முறையாக கற்றிருக்க மாட்டீர்கள்.. அல்லது அவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்க மாட்டீர்கள். காரணம் மற்றத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றால்தான், தொழில்நுட்பப் படிப்புகளை(Professional course) படிக்க முடியும் என்ற எண்ணம் அந்த வயதில் மேலோங்கி இருந்திருக்கும். இதனால் தமிழை கடனே என படித்துவிட்டு, தேர்வில் சுமாரான மதிப்பெண்கள் பெற்று , கல்லூரிகளில் சேர்ந்து ஏதாவது ஒரு கல்வியை கற்று, இப்போது போட்டித் தேர்வுகளுக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பீர்கள்.

இது பெரும்பாலானோர்களுக்கு பொருந்தும். இதில் நானும் விதிவிலகல்ல..

ஆனால் தமிழை கற்பது என்பது மிகவும் எளிமையானதுதான்.. பிறந்ததிலிருந்தே தமிழ் மொழியில் பேசி, தமிழ்மொழியில் கல்விக் கற்றவர்களுக்கு தமிழிலக்கணத்தை கற்பது என்பது எளிமையான ஒன்றுதான். கூடுதல் கவனம் செலுத்தி, வார்த்தைகளைப் புரிந்துகொண்டு, ஆழ்ந்து படித்தாலே தமிழ் மொழி இலக்கணம் உங்கள் வசமாகிவிடும். இந்த தளத்தில் எனக்குத் தெரிந்த தமிழிலக்கணத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். இத்தளத்தில் இடம்பெறுபவை அனைத்தும் நான் கற்றறிந்த, கேட்டறிந்த, படித்தறிந்த தகவல்களை உங்களோடு பகிர்பவைதான்.

தமிழ் இலக்கணம் என்பதால் பதிவில் ஏற்படும் தவறுகள், பிழைகள் ஏதாவது இருப்பின் மதிப்பிற்குரிய தமிழ் சான்றோர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் படித்த புலவர்கள், தயவு செய்து தவறை குறிப்பிட்டு சொல்ல கேட்டுக்கொள்கிறேன். இதனால் பலரும் பயனடைவதோடு, நானும் என்னுடைய தமிழ் அறிவை மேம்படுத்திக்கொள்ள வழி ஏற்படும்..

நன்றி நண்பர்களே..! அடுத்த பதிவில் தமிழ் இலக்கணம் என்றால் என்ன? இலக்கணத்தின் வகைகள் என்ன? ஒவ்வொரு வகைக்கும் உதாரணத்துடன் கூடிய விளக்கத்தையும் காணலாம். புரியாதவர்கள் கருத்துப் பெட்டியில் உங்கள் கருத்துகளை தட்டச்சு இட்டு, கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.தோன்றும் ஐயங்களையும் கருத்துரைப்ப் பெட்டியில் தட்டச்சிட்டு கேட்கலாம்.. நன்றி நண்பர்களே..!

No comments:

Post a Comment